CLOSING DATE : 09-11-2021
அமெரிக்காவில் பிரஜாவுரிமை பெறுவதற்கு இலங்கையர்களுக்கு இந்த முறை அதிக வாய்ப்பு காத்திருக்கின்றது . கீழே வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பூரணப்படுத்தும் போது ஒவ்வொரு அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்து விண்ணப்பிற்கவும்.
கவனிக்க வேண்டிய விடயம் |
---|
01. கல்வித்தகமையாக GCE. (A/L) பரீட்சையில் சித்தியடைந்து இருக்க வேண்டும். அல்லது அதற்கு சமனான தகமையினை பூரணப்படுத்தி இருக்க வேண்டும். 02. கடந்த 5 வருடத்தில் 2 வருட தொழில் பயிற்சி அனுபவத்தினை கொண்டு இருக்க வேண்டும். 03. ஒருவர் ஒரு விண்ணப்பத்தினை மாத்திரமே பூரணப்படுத்தி அனுப்ப முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பத்தினை அனுப்புபவர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 04. விண்ணப்பிற்க பிற போலியான முகவர்களை நம்பி உங்கள் பணத்தினை ஏமாந்து விட வேண்டாம். கீழே தரப்படும் லிங்கில் நீங்கள் எந்த பணமும் செலுத்தாமல் விண்ணப்பிற்க முடியும். 05. விண்ணப்பத்தினை நிரப்ப தேவையான தரவுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (Passport, Photos, மனைவி, குழந்தைகளின் விபரங்கள்.) 06. விண்ணப்பிற்க கண்டிப்பாக Passport தேவைப்படும். மனைவி குழைந்தைகளுக்கு அவசியம் இல்லை. 07. பாவனையில் உள்ள மின்னஞ்சல் முகவரி தேவை. 08. விண்ணப்பித்த பின்னர் தரப்படும் உருத்திப்படுத்தல் இலக்கத்தினை கவனமாக பதிவு செய்து (Print) கொள்ளவும். 09. நீங்கள் திறுமணமானவராக இருந்தால் உங்கள் மனைவியின் விபரங்களை பூரணப்படுத்த வேண்டும். 21 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் இருப்பின் அவர்களின் விபரங்களையும் பூரணப்படுத்த வேண்டும். 10. கணவனும் மனைவியும் தனி தனியாக விண்ணப்பிக்கலாம். எவர் தெரிவானாலும் இருவரும் செல்ல முடியும். |
அறிவுறுத்தல் (Instructions) |
---|
உங்கள் தொழிலுக்கு தேவைப்படும் தகைமைகளை அறிந்துகொள்ள |
---|
www.onetonline.org |
புகைப்படம் எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை |
---|
முழுமையான விவரங்களுக்கு : Photo Instruction |
01. முன்னர் விண்ணப்பித்த புகைப்படம் இருந்தால் விண்ணப்பிட்க வேண்டாம். புதிதாக எடுத்துகொள்ளவும்.. 02. நிகழ்கால புகைப்படம் பயன்படுத்தப்பட வேண்டும். 03. Smart Phone மூலம் புகைப்படம் எடுத்துகொள்ள முடியும். 04. நிறப்புகைப்படம் பயன்படுத்த வேண்டும். 05. தெளிவான புகைப்படமாக இருக்க வேண்டும். 06. உங்கள் தலை படத்தின் 1- 1 1/3 ” inch (22 mm – 35 mm ) இற்குள் வரணும் 2″ × 2″ 300 pixels per inch digital photo. 07. சமய காரணம் தவிர்ந்து ஏனையவற்றிட்காக தலை முடியினை மறைக்க கூடாது, கண்ணாடி போடக்கூடாது. 08. நிழல் விழுவதை தவிர்துகொள்ளவும்., சிரித்தல் முறித்தல் கூடாது. 09. கண்கள் மூடாமல் திறந்து இருக்க வேண்டும். 10. சாதரணமாக போடும் சட்டை அணிந்து இருக்க வேண்டும். |
எவ்வாறு விண்ணப்பிற்க வேண்டும். |
---|
உங்களுக்கு விண்ணப்பங்களை பூரணப்படுத்த 60 நிமிடங்கள் வழங்கப்படும். அதற்குள் விண்ணப்பங்களை பூரணப்படுத்த வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் விண்ணப்பிடற்க தவறி விட்டால் மீண்டும் முதலில் இருந்து விண்ணப்பிற்க வேண்டும். நீங்கள் ஒரு முறை விண்ணப்பித்து விட்டால் அதில் மாற்றங்கள் எதுவும் செய்ய முடியாது.இரு முறை விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். |
விண்ணப்பித்தவுடன் அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட குறியீடு இலக்கம் வழங்கப்படும் அதனை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் |
குழுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 8 ஆம் திகதி மே மாதம் 2022 முதல் dvprogram.state.gov என்ற இணையத்தளத்தில் அறிவிக்கப்படுவார்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட குறியீடு இலக்கத்தை பயன்படுத்தி அதனை அறிந்து கொள்ள முடியும். |
விண்ணப்பிக்க கீழே உள்ள Link ஐ Click செய்யவும். |
---|
APPLY HERE |