பயிலுனர் பட்டதாரிகளின் பயிற்சிக்காலத்தை மேலும் 6 மாதகாலதிற்கு நீடிக்க பொது நிறுவாக அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2020/09, 2021/02 காலப்பகுதிகளில் பயிலுனர்களாக பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு 12 மாதகால பயிற்ச்சி வழங்கப்பட்டு இருந்தது. அவர்களில் 15000 பேர்களின் பயிற்சிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது.
2020 வேலையற்ற பட்டதாரிகளை வேலைக்கு இணைத்தல் செயத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட 50000 பட்டதாரிகளின் பயிலுனர் காலம் முடிவடைவதால் மீண்டும் 6 மாத காலங்களுக்கு நீடிப்பதற்கு பொது நிருவாக சேவைகள் அமைச்சு தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனடிப்படையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விதிமுறைகள் மீள் பரிசீலனை செய்து அமைச்சரவை பத்திரம் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் மாகாண சபை, பிரதேச சபை, அமைச்சு, திணைக்களம் என்பவற்றில் காணப்படுகின்ற பதவி வெற்றிடங்களை இனம் கண்டு அதற்கு பயிலுனர் பட்டதாரிகளை உள்வாங்க அனுமதி பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் 2022 வரையான காலப்பகுதிக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கான நிதியை அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அமைச்சிற்கு ஒதுக்கவும் அனுமதி கோரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபைகளுக்கு கீழே வரும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு 18000 பேர்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மற்றும் மாகாண சபைகளில் காணப்படுகின்ற புதிய அபிவிருத்தி பணிகளுக்கு தேவைப்படுகின்ற மனித வளத்தினை அடிப்படையாக கொண்டு பயிலுனர் பட்டதாரிகள் உள்வாங்கப்பட உள்ளனர்.