All SriLanka Schools reopen in Next Month
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் மாதம் 13 ஆம் திகதிக்குள் திறப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் படி சுகாதார அமைச்சிற்கு நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோன காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திறப்பதற்கான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கி உள்ளார். இதனால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன குழு ஒன்றினை நியமித்து அதன் உதவியுடன் அறிக்கை ஒன்றினை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார்.
பாடசாலைகளை திறப்பதற்கான திட்டத்தினை ஏற்கனவே தயாரித்துள்ள கல்வி அமைச்சு எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2 மில்லியன் மாணவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ள இந்த நிலையில் 12 தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை துரித்தப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன கிராம புறங்களில் உள்ள பாடசாலைகளை திறப்பதற்கு ஆளுநர்களின் அனுமதியினை பெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஆன்லைன் மூலம் இடம்பெறும் கற்பித்தலில் நிறைய சிக்கல்கள் இருப்பதனையும் சுட்டிக்காட்டினர்.