Model Application for all kind of Qualifications
நம்மில் அநேகமான நண்பர்களுக்கு வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள தகவல்கள் தெரிந்திருக்கும் ஆனால் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்வதில் அதிக சிரமம் காணப்படும்
அவ்வாறு விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள நாம் இலகுவான வழியினை உங்களுக்காக இந்த பதிவின் மூலம் வழங்க உள்ளோம்.
அரச பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் வகைகள் இரண்டாக காணப்படும். ஒன்று பதவிக்கான ஒரு மதிரி விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு இருக்கும். அவற்றை போன்று தயாரித்து பூரணப்படுத்தி அனுப்பினால் போதும்.
இரண்டாம் வகை எந்த வித மாதிரியும் இல்லாமல் சாதரணமாக விண்ணப்பங்களை அனுப்ப சொல்லப்பட்டு இருக்கும். அவ்வாறான பதவிகளுக்கு நீங்கள் சுயமாக தயாரித்த விண்ணப்ப படிவங்கள் பூரணப்படுத்தப்பட்டு அனுப்பவேண்டி இருக்கும்.
உங்களுடைய தகைமைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட சுயவிண்ணப்ப படிவத்தை இந்த பதிவின் மூலம் வழங்குகின்றோம். இதில் O/L, A/L மற்றும் DEGREE தகமைக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது.
மாதிரி விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பபடிவங்களை பெற்று கொள்வதில் சிரமமா ? அதற்கான வழியும் உள்ளது. நாங்கள் முடிந்த வரை அவ்வாறான வேலைகளை எமது பக்கத்தின் மூலம் பதிவிடுகின்ற போது அதற்கான விண்ணப்ப படிவங்களை இணைத்தே பதிவிடுவோம்.
அவ்வாறு நாங்கள் பதிவிடாத ஏதேனும் வேலை வாய்ப்புகள் சம்பந்தமான விண்ணப்ப படிவங்களை நீங்கள் பெற வேண்டி இருப்பின் தயவு செய்து எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். நாம் உங்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை 24 மணிநேரத்திற்குள் தயாரித்து வழங்குவோம்.