2019 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தினால்புதிய பாடத்திட்டதிட்கு அமைவாக BA வெளிவாரி பட்டப்படிப்பிற்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழிமூலம் கற்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
க.பொ.த (உயர் தரத்தில்) எந்த ஒரு பாடப்பிரிவிலும் பரீட்சைக்கு தோற்றி பல்கலைகழக அனுமதியினை பெற்றிருக்க வேண்டும்.
க.பொ.த (உயர் தரத்தில்) சிறந்த பெறுபேறுகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் குறித்த கற்கைக்கு சேர்த்துக்கொள்ள இருக்கின்றனர்.
தகமைகள் :
- பழைய பாடத்திற்கு அமைவாக (பொது அறிவு பரீட்சை இல்லாமல்) க.பொ.த (உயர் தரத்தில்) பரீட்சைக்கு தோற்றி 3தடவைக்கு மேற்படாத வகையில் 3 பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருப்பதோடு மொத்தம் 180 புள்ளிகளுக்கு குறையாமல்இருக்க வேண்டும்.
(OR)
- பழைய பாடத்திற்கு அமைவாக (பொது அறிவு பரீட்சை உள்ளடங்கலாக) க.பொ.த (உயர் தரத்தில்) பரீட்சைக்கு தோற்றி 3 தடவைக்கு மேற்படாத வகையில் 3 பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருப்பதோடு மொத்தம் 135 புள்ளிகளுக்கு குறையாமலும் பொது அறிவு பரீட்சையில் 30 புள்ளிக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
(OR)
- புதிய பாடத்திற்கு அமைவாக க.பொ.த (உயர் தரத்தில்) பரீட்சைக்கு தோற்றி 3 தடவைக்கு மேற்படாத வகையில் 3 பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருப்பதோடு பல்கலைகழக அனுமதிக்கு தேவையான "Z" புள்ளிகளுடன் பொது அறிவு பரீட்சையில் 30 புள்ளிகளுக்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
இந்த இரண்டு பாட நெறிக்கும் இலத்திரனியல் விண்ணப்படிவங்களை பேராதெனிய பலகலைகழக இணையத்தளத்தில் காணப்படுகின்றது. அதனை பூரணப்படுத்தி அனுப்பி வைக்க வேண்டும். ஏனைய விபரங்கள் மற்றும் விண்ணப்பபடிவங்களை பெற்றுக்கொள்ள கீழே உள்ள Application இணை Click செய்யவும்.
நன்றி
தமிழால் இணைவோம்
HONEYJOBB.COM